Saturday, 15 January 2022

அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பதிவு மிகவும் முக்கியதத்துவம் வாய்ந்தது ஆகும்.இதில் இந்த ஆண்டு உயர்நிலை பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் மற்றும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கட்டமைப்பில் , அருகாமைப் பள்ளி விதிகளின்படி , உயர்நிலை மற்றும் மேல்நிலைகளில் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் , தற்போதுள்ள நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் , உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் செயல்பாடும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் 2022-2023 ஆண்டு வரைவு திட்டத்தில் தற்போதுள்ள நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் , உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் தேவையின் அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய கருத்துருக்கள் பெற்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2019-2020 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்துதல் சார்ந்து பெறப்பட்ட கருத்துருக்கள் இத்துடன் தங்கள் பார்வைக்கு நகல் அனுப்பப்படுகிறது. இப்பட்டியலில் உள்ள பள்ளிகளையும் மீண்டும் ஆய்வு செய்து தரம் உயர்த்த தகுதியான கருத்துருக்களை , ஆம் பள்ளிகளுக்கான 2022-2023 கல்வியாண்டிற்கான தரம் உயர்த்த கோரும் பள்ளிகள் பட்டியலுடன் இணைத்து அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Upgraded School List - DSE Proceedings - Download here...

0 comments:

Post a Comment