புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட COVID-19 சிகிக்சைக்கான கோரிக்கைகளைத் தீர்ப்பது குறித்த அரசாணை வெளியீடு!
GO NO : 165 - Download here...
" மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் சங்கங்களால் கொரோனாவுக்கான சிகிச்சைகளை உயர் சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைகளைப் பொறுத்தவரையில் , அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான 10 இலட்சம் ரூபாயை விடவும் கூடுதலாக , கொரோனா சிகிச்சைக்கான செலவுத் தொன அரசு நிதி உதவியின் கீழ் அனுமதிக்கப்படும்.
அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு காப்பீட்டு திட்டம்
1.காலம்
1.7.21 முதல் 30.6.25 வரை
4 ஆண்டுகள்
2.சந்தா
Rs. 180 என்பது Rs .300 ( 295 +5) ஆக உயர்த்தப்பட்டுள்ளது
3.காப்பீட்டு தொகை
Rs 4 லட்சம் என்பது Rs .5 லட்சமாக உயர்ந்தப்பட்டுள்ளது
கேன்சர் உறுப்பு மாற்று சிகிச்சை Rs .7.50 லட்சம் என்பது Rs .10 லட்சமாகவும்
கண்புறை அறுவை சிகிச்சைக்கு Rs 25,000 என்பது Rs 30,000 ஆகவும்
கர்ப்பை அகற்றும் சிகிச்சைக்கு
Rs .45 000 என்பது Rs .50,000 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது
5.அவசரம் மற்றும் அவசரமில்லாத சிகிச்சைக்கு அங்கீகாரம் இல்லாத மருத்துவமனைகளில் செய்யலாம்
75 % தொகை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்