Showing posts with label pongal 2500 government order. Show all posts
Showing posts with label pongal 2500 government order. Show all posts

Monday, 21 December 2020

தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூ.2,500: அரசாணை வெளியீடு:

சென்னை: தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் கடந்த சனிக்கிழமையன்று சிறு மருத்துவமனையைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ரூ.2,500  வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் பொங்கல் பரிசு குறித்த அரசாணையை முழுமையாகக் காண.. இங்கே கிளிக் செய்யவும்..

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பரிசாக ரூ.2,500 வழங்குவதற்கு தமிழக அரசு ரூ.5,600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2500 வழங்கப்பட உள்ளது.