Showing posts with label NEW GO'S. Show all posts
Showing posts with label NEW GO'S. Show all posts

Wednesday, 17 May 2023

ஆசிரியரின்றி உபரியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டது - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்தல் - அரசாணை வெளியீடு!

 
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றுள்ளவாறு முதுகலை ஆசிரியர் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆணையரின் பொதுத் தொகுப்பில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டது - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்தல் - அரசாணை வெளியீடு!

 G.O.Ms.No.91 PG Post - IFHRMS Entry - Download here...

Friday, 3 March 2023

929 அரசு பள்ளிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைப்பதற்கான அரசாணை வெளியீடு.

 

IMG_20230303_132130

பள்ளிக் கல்வி- பெருநகர சென்னை மாநகராட்சியில் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதியில் உள்ள 790 பள்ளிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி உட்பட 139 பள்ளிகளை மட்டும் சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்குதல் மற்றும் மீதமுள்ள பிற துறைப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது

GO NO : 48 , DATE : 01.03.2023 - School merger go - Download here

Tuesday, 29 November 2022

2760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் - 2022 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

 

IMG_20221129_185846

பள்ளிக் கல்வி - 1990-1991 மற்றும் 2002-2003 முதல் 2006-2007 , 2011-2012 , 2014.2015 மற்றும் 2018-2019 ஆகிய ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு மொத்தம் நவம்பர் -2022 ஆம் மாதத்திற்கு ஊதியக் கொடுப்பாணை Pay Authorization ) வழங்குதல் - சார்பு . ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

2760 Posts Pay Order - Download here.

Wednesday, 19 October 2022

*ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொது பிரிவினர்களுக்கு 40லிருந்து 45 ஆகவும் , மற்றவர்களுக்கு 45லிருந்து 50ஆகவும் அதிகரித்து அரசாணை வெளியீடு*

Screenshot_2022_1020_111935
 


1. அரசாணை ( நிலை ) எண் : 12 , 
பள்ளிக் கல்வி ( தொ.க .1 ( 1 ) த் துறை , நாள் 30.012020 

2. அரசாணை ( நிலை ) எண் .13 , 
பள்ளிக் கல்வி ( பக 3 ( 1 ) த் துறை , 
நாள் 30.012020.

3. அரசாணை ( நிலை ) எண் .14 , 
பள்ளிக் கல்வி ( பக 2 ( 1 ) த் துறை , 
நாள் 30.01.2020 

4. பள்ளிக் கல்வி ஆணையரின் 
கடித ந.க.எண் .57345 / W3 / S1 / 2019 , 
நாள் 29.09.2021 

ஆணை : மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன . 

அவ்வரசாணைகளில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் , ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும் , இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .

2. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களை நேரடி 2 நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட 09.09.2021 நாளிட்ட அறிவிக்கையில் , ஆசிரிய பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு மேற்காணும் அரசாணைகளில் நிர்ணயிக்கப்பட்டவாறு பொதுப் பிரிவினருக்கு 40 எனவும் , இதர பிரிவினருக்கு 45 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது . 

3. அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ல் , அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு , தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும் , அதிகபட்ச வயது உச்ச வரம்பினைக் கொண்டுள்ள பதவிகளைப் பொறுத்த வரையில் , தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது . 

மேலும் , அதனடிப்படையில் தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது 

 4. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , பள்ளிக் கல்வி ஆணையர் ஆசிரியர் பணிக்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுத காத்திருக்கும் நிலையில் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று நேரடி நியமனத்திற்கான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை எனவும் , இந்நிலையில் ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை அவர்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் வெளியிடப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என பணிநாடுநர்கள் மனு அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் . 

எனவே , ஆசிரியர் பணிநாடுநர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிவிதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி விதிகளில் , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் , 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயித்து ஆணைவழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார் . 

5. பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை அரசு ஆய்வு செய்து பின்வருமாறு ஆணையிடுகிறது :. (தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்பிற்கான விதி எண் .6 a ) , 5 ( a ) மற்றும் 6 ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 - லிருந்து 45 - ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 - லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது . 

( i ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09,09,2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும் . 

( ii ) இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31 : 12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது . 

(iii). இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும் . 

( iv ) அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ன்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை , 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் , இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது

Friday, 16 September 2022

பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண் 151, நாள்: 09.09.2022 வெளியீடு!!!

பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண் 151, நாள்: 09.09.2022 வெளியீடு!!! PDF CLICK HERE

Tuesday, 16 August 2022

சுயநிதிப் பள்ளிகளுக்கு ஓராண்டிற்கு தொடர் அங்கீகாரம் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!!!

சுயநிதிப் பள்ளிகளுக்கு ஓராண்டிற்கு தொடர் அங்கீகாரம் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!!! government order click here

Thursday, 21 July 2022

Sunday, 17 April 2022

கல்வித்துறையை புரட்டி போட்ட அரசாணைகள் 101,மற்றும் 108.என்ன அந்த அரசாணையில் உள்ளது.நம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்:

கல்வித்துறையை புரட்டி போட்ட அரசாணைகள் 101,மற்றும் 108.என்ன அந்த அரசாணையில் உள்ளது.நம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்:

அரசாணை எண் 101- PDF CLICK HERE

அரசாணை எண் 108- PDF CLICK HERE


Tuesday, 12 April 2022

GO NO : 36 DATE : 11.04.2022 மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது - அரசாணை வெளியீடு!

 


GO NO : 36 DATE : 11.04.2022

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது - அரசாணை வெளியீடு!

Suspended EL Surrender GO - Download here


Tuesday, 25 January 2022

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு.

 

tnassembly2.jpg?w=360&dpr=3

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படியானது 14 சதவீதம் உயா்த்தப்படுகிறது.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படியானது 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்து வழங்கிட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

செலவும், ஊழியா்களும்

அகவிலைப்படி உயா்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டுக்கு தோராயமாக ரூ.8,724 கோடி கூடுதல் செலவு ஏற்படும். 

தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள சூழ்நிலையிலும், அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்தி வழங்கிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாருக்கு எவ்வளவு?

14 சதவீதம் அகவிலைப்படி அதிகரிப்பதால், அரசு ஊழியா்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை ஊதியத்தில் உயா்வு ஏற்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அகவிலைப்படி உயா்வுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியா்கள் சங்கங்கள், ஓய்வூதியதாரா் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.


மூன்று மாதங்களுக்கு முன்பு...

அகவிலைப்படி உயா்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது. அதில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே, சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி உரையாற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலின், 16 லட்சம் அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உயா்வு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அளிக்கப்படும் என்றாா். 

சட்டப் பேரவை அறிவிப்பின்படி அகவிலைப்படி உயா்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, 19 January 2022

கோவிட் - 19 (3வது அலை) ஆல் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு 7 நாட்கள் வரையில் விடுப்பு வழங்கலாம் என்ற மத்திய அரசின் புதிய ஆணை!!!

கோவிட் - 19 (3வது அலை) ஆல் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு  7 நாட்கள் வரையில் விடுப்பு வழங்கலாம்  என்ற மத்திய அரசின் புதிய ஆணை!!! Read More Click Here

Monday, 27 December 2021

விழுப்புரம் மண்டலம் பள்ளிக்கல்வி ஆணையரின் பள்ளிகள் மற்றும் கற்றல் பணிகளை ஆய்வு செய்தல்-விழுப்புரம்,கடலூர்,திருவண்ணாமலை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை ஆய்வுசெய்தல் -03.01.2022 மற்றும் 04.01.2022 அரசாணை வெளியீடு. Inspection of Schools and Learning Activities of Villupuram Zone School Education Commissioner-Inspection of Schools in Villupuram, Cuddalore, Thiruvannamalai and Chengalpattu Districts-03.01.2022 and 04.01.2022 Government Release.

விழுப்புரம் மண்டலம் பள்ளிக்கல்வி ஆணையரின் பள்ளிகள் மற்றும் கற்றல் பணிகளை ஆய்வு செய்தல்-விழுப்புரம்,கடலூர்,திருவண்ணாமலை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை ஆய்வுசெய்தல் -03.01.2022 மற்றும் 04.01.2022 அரசாணை வெளியீடு.

GOVERNMENT ORDER CLICK HERE

Friday, 17 December 2021

2021-22 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு.

 

2021-22 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு.

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு :

முதலில் பணிநிரவல் கலந்தாய்வு பள்ளிஅளவிலான முன்னுரிமை அடிப்படையில் நடைபெறும்.

 புதிதாக பணியில் சேர்பவர்கள் ஒரே பள்ளியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் மாற்றப்படுவார்கள்.

General Teachers Transfer Norms 2021 - 22 | Download here...

Teachers Transfer Norms - Tamil Version - Download here...

Friday, 3 December 2021

G.O-114- கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் ரத்து -அரசாணை வெளியீடு:G.O-114- Cancellation of Loans Received by Women Self Help Groups in Co-operative Societies -Government Publication:

G.O-114- கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் ரத்து -அரசாணை வெளியீடு- Download Click Here

அங்கன்வாடி பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு-

அங்கன்வாடி பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு- Read More Click Here

மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கான அரசாணை

மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கான அரசாணை- Read More Click Here

Wednesday, 1 December 2021

மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கலைப் பெறும் வசதி செயல்படுத்தப்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கலைப் பெறும் வசதி செயல்படுத்தப்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! GOVERNMENT ORDER CLICK HERE

Tuesday, 16 November 2021

அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணங்களையும் அரசே வழங்குதல் - அரசாணை வெளியீடு!!!

 

அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணங்களையும் அரசே வழங்குதல் - அரசாணை வெளியீடு!!! Read More Click here

Wednesday, 10 November 2021

மழை புயல் போன்ற காரணங்களுக்காக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களில் ஆசிரியர்கள், மற்றும் அமைச்சு பணியாளர்கள்* பணிக்கு வரவேண்டியதில்லை* குறித்த அரசாணை:

மழை புயல் போன்ற காரணங்களுக்காக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களில் ஆசிரியர்கள், மற்றும் அமைச்சு பணியாளர்கள்* பணிக்கு வரவேண்டியதில்லை* குறித்த அரசாணை- PDF CLICK HERE