Thursday, 23 September 2021

பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு வருட மகப்பேறு விடுப்பிலும் வீட்டு வாடகைப்படி வழங்கப்படும் அரசாணை வெளியீடு :

 GO NO : 89 , DATE : 09.09.2021

தமிழக அரசு பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தி 2016 - ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. பின்னர் அந்த மகப்பேறு விடுப்பு சமீபத்தில் 12 மாதமாக ( ஒரு வருடம் ) உயர்த்தப்பட்டது. மகப்பேறு விடுப்பு காலத்தில் ஊதியத்துடன் வழங்கப்படும் வீட்டு வாடகைப்படி , 9 மாதமாக மகப்பேறு விடுப்பு உயர்த் தப்பட்ட போதிலும் மாதத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டது. 

இந்த குழப்பத்தை நீக்கி தற்போது அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி , மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட ஒரு வருடத்துக்கும் வீட்டு வாடகைப்படியை ய வழங்கி , அதற்கான திருத்தத்தை அரசுப்பணியாளர்கள் அடிப் கு படை விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

( நேற்று தவறுதலாக வெளியிட்ட செய்திக்கு கல்விச்செய்தி வருத்தம் தெரிவிக்கிறது. தினகரன் நாளிதழ் நிருபர் கொடுத்த செய்தியின் மூலம் வெளியிடப்பட்டது.)

IMG_20210922_141809

IMG_20210922_141816

0 comments:

Post a Comment